இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2020 வெளியீடுகள் > உலக மதங்களின் இணைப்பு
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

உலக மதங்களின் இணைப்பு

 அனைத்து மதங்களையும் இணைக்கும் வல்லமை சித்தர்களின் மெய்யான இந்துமதத்துக்குத்தான் உண்டு.

இந்த இதழில் உள்ள கட்டுரைகள்:

 1. "இந்துமத அருட்பேரரசு உருவான உண்மை வரலாற்றின் ஆரம்பம்" -  மெய்யான இந்துமதத்தைக் காத்திட உருவாக்கப்படும் இந்து மறுமலர்ச்சி இயக்கம் தமிழகத்தில் வளரும் போதே பலவித தடுமாற்றங்களைச் சந்திக்கும் என்பதை விளக்கி குருதேவர் அவர்கள் எழுதிய அஞ்சல்.

2. "அருளைப் பொருளுக்கு விற்பவரல்ல நாம்!: - அருட்கணிப்பு என்பது பதினெண்சித்தர் பீடாதிபதிகள் மட்டுமே முழுமையாகச் செய்யக் கூடிய ஒன்று என்பதனை மாற்றி, தமது மாணாக்கர்களில் விருப்பம் உடையவர்களை எல்லாம் அருட்கணிப்பு செய்யப் பயிற்சிகளைத் தரத் தயாராக இருந்தார் குருதேவர் என்பதை இந்த அஞ்சலின் மூலம் புரிந்திடலாம்.

3. "அனைத்து மதங்களையும் இணைக்கும் வல்லமை சித்தர்களின் மெய்யான இந்துமதத்துக்குத்தான் உண்டு!" - வெளிநாட்டில் வாழும் தமது அடியான் ஒருவருக்கு விளக்கம் தரும் விதத்தில் எழுதப்பட்ட இந்த அஞ்சல் வடிவக் கட்டுரையில் குருதேவர் சுருக்கமாக மெய்யான இந்துமதம் அனைத்து மதங்களுக்கும் தாய் நிலையில் இருப்பதால் அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உடையது என்பதை தெளிவு படுத்தி உள்ளார்.

4. "பதினெண்சித்தர் குவலய குருபீடம்" - 1986இல்தான் குருதேவர் அவர்களுக்கு கிடைத்த வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி கருகுலம் அமைந்தது. அதனை விளக்கும் விதமாக ஒரு அஞ்சலில் அனைத்து அடியான்களுக்கும் குருதேவரின் தலைமைப்பீடம் வாயிலாக விடுக்கப்பட்ட அஞ்சல் இது.

5. "மெய்யான இந்துமதத்தின் உயிர்நாடியே குருதிப் பலியும், இறைச்சிப் படையலும்தான்" - முசிறியில் தயாராகி இருந்த ஓர் அடியானுக்கு குருதேவர் எழுதிய கருத்து விளக்க அஞ்சலில், குருதிப் பலியும் இறைச்சிப் படையலும் வழங்கித்தான் மெய்யான இந்துமதப் பூசைகளை நிறைவேற்ற முடியும் என்று ஆணித்தரமாக விளக்கி உள்ளார்.

6. "அனைத்து மதங்களுக்கு மூலக் கோயில் இந்துமதக் கோயிலே!" - மாற்று மதத்தவர்கள் வழிபடும் மூலக் கோயில்கள் அனைத்தும் மெய்யான இந்துமதத்திற்காக சித்தர்கள் கட்டிய கோயில்களே என்பதை மாற்று மதத்தவர் ஒருவருக்கு விளக்கி எழுதப்பட்ட அஞ்சல்.

 

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
PDF வடிவில் முழுமையாகப் படித்திட...>>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |