இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2024 வெளியீடுகள் > பண்பாட்டுப் புரட்சி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

பண்பாட்டுப் புரட்சி

இ.ம.இ.யும், இ.மு.க.வுமே முழுமையான பண்பாட்டுப் புரட்சியை மலரச் செய்யும்.
  • கும்பகோணம் தாராசுரத்தைச் சேர்ந்த அறிமுகத்தாருக்கு குருதேவர் விடுத்த மடல் முதலாவதாக உள்ளது. இதில் நஆயிரக்கணக்கான குடும்பத்தவர்கள் மந்திரவாதிப் பாதிப்புக்களுக்கு உள்ளாகி அதைச் சரி செய்து கொள்ள முடியாமல் தவிப்பதைப் பற்றியும், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் மூலம்தான் எளிய முறையில் குறைந்த செலவில் பரிகாரங்களைச் செய்து கொள்ள முடியும் என்பது பற்றியும் விளக்குகின்றார் குருதேவர்.
  • அடுத்ததாக இந்து முன்னேற்றக் கழகம் ஒரு சமுதாயச் சீர்திருத்தக் கழகம் என்பதனை விளக்கி கும்பகோணம் பாபநாசத்தைச் சேர்ந்த மாணாக்கருக்கு குருதேவர் விளக்கிய செயல்திட்டங்கள் அடங்கிய மடல் உள்ளது.
  • மூன்றாவதாக தமிழர்களின் இலக்கியச் சொத்துக்கள் எப்படி பாதுகாக்கப்படாமல் அழிய விடப்படுகின்றன என்பதை சுருக்கமாக விளக்கி பகுத்தறிவுப் பாரம்பரியத்தினர் ஒருவரின் வாரிசுக்கு குருதேவர் விளக்கி எழுதிய மடல் உள்ளது.
  • நான்காவதாக ஆந்திர மாநிலத்தில் உள்ள தெலுங்கு மொழி பேசும் அடியானுக்கு குருதேவர் ஆங்கிலத்தில் எழுதிய மடல் அப்படியே தரப்பட்டுள்ளது.
  • ஐந்தாவதாக சித்தர்நெறியாளர்கள் அனைவரும் பொதுமேடைகளிலும், அன்றாட வாழ்விலும் பயன்படுத்த வேண்டிய நான்வேத வாசகங்கள் உள்ளன. இவற்றை தமிழராகப் பிறந்த அனைவரும் பயன்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
  • இந்து முன்னேற்றக் கழகத்தின் அறிவிக்கை எண்:3333 அடுத்ததாக உள்ளது.
  • இறுதிப் பக்கத்தில் பயிற்சி முகாமின் போது குருதேவர் வழங்கிய சில குறிப்புக்கள் உள்ளன.

இந்த இதழினை முழுமையாக படித்திட இங்கே தொடரவும் ====>>>>

Last edited: June 14, 2024, 13:14
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |