இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2024 வெளியீடுகள் > ஞானப் பெருஞ்சுடர்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

ஞானப் பெருஞ்சுடர்

அனைவருக்கும் வழிகாட்டும் ஞானப் பெருஞ்சுடர்.

 "மதம்தான் ஒழுக்கத்தையும், தன்னலமற்ற தொண்டு மனத்தையும், தாய்மொழிப் பற்றினையும், தாய் நாட்டுப் பண்பாட்டுப் பிடிப்பினையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பரந்த போக்கினையும் உடைய தலைவர்களை உருவாக்கிடும்."

  1. இந்துமதத்திற்காக இந்தியத் திருநாட்டில் வீட்டிற்கு ஓர் ஆள் அருளாளராகத் தயாராகிட முன்வராத நிலையில் குருதேவர் தாம் மட்டும் அனைவருக்கும் அழைப்பு விடுத்திட ஞானப் பெருஞ்சுடர் ஒன்றை சுடர் விட்டெரியும் தீப்பந்தமாகக் கையில் பிடித்த படி செயல்பட்டுக் கொண்டுள்ளார் என்ற விளக்கத்தை வழங்கி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவருக்கு குருதேவர் விடுத்த நெடிய அஞ்சல் முதல் கட்டுரையாக இந்த மாத வெளியீட்டில் உள்ளது.
  2. பண்பாட்டுப் புரட்சிக்குரிய முயற்சிகள் எடுப்பது பற்றி ஆறு கட்டச் செயல்திட்டமாக குருதேவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியருக்கு வழங்கிய நெடிய அஞ்சல் வடிவக் கட்டுரை அடுத்து உள்ளது. இந்துமத வளவளர்ச்சிக்காக மாற்று வேதங்களையும், வேற்று மதங்களையும் திட்டித் தீர்க்காமல், கருத்துப் பரிமாற்றச் சிந்தனை அரங்குகள் என்ற பயிற்சி முயற்சி நிகழ்ச்சிகளை நிகழ்த்திட வேண்டும் என்பதற்காகவே இந்த ஆறு கட்டச் செயல்திட்டத்தினை குருதேவர் வழங்கி உள்ளார்.
  3. சேலம் மாவட்டப் பயிற்சி முகாம் நிகழ்ச்சியை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக நிகழ்த்திட இந்து முன்னேற்றக் கழகத்தின் முன்னணிச் செயல்வீரர்களுக்கு குருதேவர் வழங்கிய செயல்நிலை விளக்கம் அடுத்த உள்ள இந்த அஞ்சல் கட்டுரையில் உள்ளது.
  4. கடவுள்களுக்கு எல்லை உண்டு! என்ற இந்துவேதத் தத்துவத்தினை, செயல் சித்தாந்தத்தினை விளக்கி குருதேவர் வழங்கிய கருத்து மாணாக்கர் எழுதி வைத்திருந்த குறிப்புக்களிலிருந்து எடுக்கப்பட்டது இறுதியாக இந்த மாத வெளியீட்டில் உள்ளது.

 

இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

Last edited: September 15, 2024, 18:05
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |