(இந்த இதழிலிருந்துதான் சிறிய புத்தக வடிவில் அச்சிடப் பட ஆரம்பிக்கப் பட்டது. இதுகாறும் இந்த மாத வெளியீடுகள் A4 என்ற தாள் அளவில் தயாரிக்கப் பட்டு வந்தன.)
1. தமிழின மொழி மத விடுதலை இயக்கங்களின் கொள்கை விளக்கம்.
2. இந்து மதத்தின் ஆறு சமயங்கள்.
3. இ.ம.இ. வீர முழக்கங்கள்.
4. கடவுள் தமிழ், தெய்வத் தமிழ், தேவத் தமிழ் புத்தகம்.
5. 10வது பதினெண்சித்தர் பீடாதிபதியின் குருபாரம்பரிய வாசகம். (அவர் தமது இறுதிக் காலத்தில் மனம் நொந்து, சிந்தை வெந்து எழுதியவை.)
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.