இந்துமதத்தைப் பாதுகாக்க, இந்துக்களைப் பாதுகாக்க உழைக்க அழைக்கிறார் குருதேவர்! இந்து வேதத்தின் துணையோடு மதப் பயிற்சிகளை மேற்கொண்டு இந்துவேத ஆச்சாரியாராக ஆகலாம்; அதன்மூலம் இந்துக்களை இந்துக்களாக ஆக்கிட அருளை மருந்தாகவும் விருந்தாகவும் பிறருக்கு வழங்கிடலாம்; அருளை அநுபவப் பொருளாகப் பெற்று இந்துக்களின் பிணிகளை, இயலாமைகளைப் போக்கிடலாம். இதுவே இந்துக்களைப் பாதுகாக்கும் வழி. இவற்றை விளக்கி குருதேவர் எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை முதலாவதாக இடம் பெறுகின்றது.
சில ஆயிரம் ஆண்டுகளாக இந்துவேதம் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. எனவே, இப்பொதைய காலக்கட்டத்தில் இந்துவேதம் பரப்பி இந்துமதத்தைப் பாதுகாக்கப் புறப்பட்டிருப்பவரே குருதேவர் இந்துவேதநாயகம் அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் அவர்கள் என்பதை விளக்கி திருவருட்செல்வர் ஒருவருக்கு குருதேவர் எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை அடுத்து இடம் பெறுகின்றது.
நாம் யாருக்கும் எதிரி அல்ல! நமக்கும் யாரும் எதிரி அல்ல! என்ற நிலையில்தான் நாம் இன்றைய காலக்கட்டத்தில் செயல்பட்டு இந்தியாவின் இந்துக்களை இந்துமதத்தை நன்கு தெரிந்த, இந்துமதச் செயல்பாடுகளை நன்கு புரிந்த இந்துக்களாக ஆக்குவதே நம் பணி என்பதை விளக்கி குருதேவர் வழங்கிய அறிவுரை அஞ்சல் அடுத்து உள்ளது.
இருக்கு வேதமே என்றும் இருந்த, இருக்கின்ற, இருக்கப் போகின்ற வேதம் என்பதால் அதில் கூறப்பட்டுள்ள பத்து கடமைகளையும் இந்துக்களாக இருக்கின்ற அனைவரும் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கிடும் அஞ்சல் வடிவக் கட்டுரை அடுத்து உள்ளது.
இந்துக்கள் மாற்று மதத்தவர்களின் கோயில்களுக்குச் செல்வதைத் தடுக்கவும், மாற்று மதத்தவர்களிடம் மந்திரித்துக் கொள்வதைத் தடுக்கவும், மாற்று மதத்தவர்களிடம் முடிகயிறு, தாயத்து, சக்கரம், ... போன்றவை பெறுவதைத் தடுக்கவும் இந்துக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஆறு கடமைகள் அடுத்து உள்ள இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.
இந்த இதழை முழுமையாகப் படித்திட ===>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.