இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2026 வெளியீடுகள் > இந்துக்களை தமிழ்மொழிதான் காக்கும்!
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இந்துக்களை தமிழ்மொழிதான் காக்கும்!

"இந்துக்களைக் காப்பாற்றும் ஆற்றல் தமிழ்மொழியில்தான் இருக்கிறது!"

 

இந்த இதழின் முதல் கட்டுரையில் 'இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவது ஏன் கடினமாக இருக்கின்றது?' என்ற வினாவை எழுப்பி அதற்கு விடையாக இந்துக்கள் ஒரே ஒரு கோயிலையோ, கடவுளையோ, தத்துவத்தையோ பிடிவாதமாக பின்பற்றிக் கொண்டு தாங்கள் இந்துக்கள் என்ற அடிப்படைக் கருத்தை மறந்து வாழ்வதுதான் காரணம் என்பதை விளக்கி; அதற்கு அருமருந்தாக ஆதிசிவனார் அருளிய இந்துவேதத்தை இந்துக்களுக்கு இம்மண்ணுலகில் பன்னிரண்டாவது முறையாக குருதேவர் அருளி அதன் மூலம் ஒற்றுமைப்படுத்த முயல்கின்றார் என்ற செய்தி விளக்கம் வழங்கப்படுகின்றது.

அடுத்ததாக, இந்துமதம் இந்தியாவில் உள்ள இந்துக்களை நெறிப்படுத்தினாலும், அதற்கு மேலாக உலக நாடுகளில் எல்லாம் அருளாட்சியை ஏற்படுத்தும் என்பதை உலகியலாக காரணகாரியங்களோடு விளக்கும் கட்டுரை இடம் பெறுகின்றது.

மூன்றாவதாக, இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களைக் காப்பாற்றும் ஆற்றல் தமிழ்மொழியில்தான் இருக்கிறது! தமிழர்களிடம்தான் இருக்கிறது! தமிழ்நாட்டில்தான் இருக்கிறது! என்ற கருத்தை விளக்கி இந்துவேதத்தை மக்களிடம் கொண்டு செல்ல உழைக்க வேண்டும் என்பதை குருதேவர் வலியுறுத்தும் கட்டுரை இருக்கிறது.

நான்காவதாக உள்ள கட்டுரையில் கிடைக்கும் வாசகம்: 'யாராக இருந்தாலும் தமிழ்மொழியை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் தமிழர்களே!' என்ற ஆதிசிவனாரின் வாக்கின் படி தமிழகத்தில் உள்ள அனைவரையும் தமிழர்களாகத் தயாரிக்க வேண்டும். அப்படி தயாரிக்கப்படும் தமிழ்நாடுதான் இந்தியாவின் மதமான இந்துமதத்தைக் காக்கும் ஆற்றல் பெற்றது என்பதை விளக்கிடுகின்றது இந்தக் கட்டுரை.

இறுதியாக உள்ள சிறிய குறிப்பேட்டில், 'இந்துவேதத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு குருதேவரால் தயாரிக்கப்பட்ட சன்னிதானங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என்பதை விளக்கி அதற்காக சன்னிதானங்கள் உழைக்க வேண்டும் என்று குருதேவர் அருளுகின்றார்.

இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

 

 

Last edited: July 07, 2026, 17:58
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |