இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2026 வெளியீடுகள் > அருட்படை திரட்டுதல்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

அருட்படை திரட்டுதல்

அருட்படை திரட்டி அருளாட்சி அமைப்புப்பணி நிகழ்த்துதல்
  1. திருவெள்ளறையில் நிகழ்ந்த பொதுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட வாழ்த்துரையில் இந்துவேதத்தின் அடிப்படைக் கருத்துக்கள் விளக்கப்படுகின்றன. இந்துவேதப்படி இல்லற வாழ்க்கைதான் சிறந்தது; மனிதர்கள் தத்தம் குடும்ப ஆண்டவர்களையும், குலதெய்வங்களையும் வழிபடுதல் அவசியம்; அவரவர் தாய்மொழியில்தான் தங்களது வழிபாடுகளை, பூசைகளை நிகழ்த்திக் கொள்ள வேண்டும் ... போன்ற கருத்துக்கள் இந்தக் கட்டுரையில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.
  2. சித்தர் வேதகணநாதருக்கு குருதேவர் வழங்கிய அறிவுரைகள் அடங்கிய நெடிய அஞ்சல் அடுத்து உள்ளது. இதில் நம்மைச் சந்திப்பவர்களையும், ஐய வினாக்கள் எழுப்பி விடைதேடுபவர்களையும் எப்படி நம்மவர்களாக ஆக்கிக் கொள்வது என்ற அறிவுரையையும், மாற்று வேதத்தவர்களையும் வேற்று மதத்தவர்களையும் விமரிசித்துச் செயல்படக் கூடாது என்ற எச்சரிக்கையையும், குருதேவர் எழுதி வழங்கும் கட்டுரைகளை அனைவரும் முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டு தயாராக வேண்டும் என்ற அறிவுரையையும் இந்த அஞ்சலில் குருதேவர் வழங்குகின்றார்.
  3. இறுதியாக இந்த மாத வெளியீட்டில் இந்துவேத முன்னேற்றக் கழகத்தின் பொதுக் கூட்டங்களில் முழங்க வேண்டிய முழக்கங்களை குருதேவர் அவர்களின் அருட்பட்டங்களின் அடிப்படையில் எப்படித் தயாரித்துக் கொள்வது என்ற மாதிரி விளக்க அஞ்சல் உள்ளது.

இந்த இதழினை முழுமையாகப் படித்திட ===>>>

 

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |