இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2026 வெளியீடுகள் > அரசியலும் ஆன்மீகமும்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

அரசியலும் ஆன்மீகமும்

அரசியலுக்கு ஆன்மீகம் தேவைப்படுகிறது! ஆன்மீகத்திற்கு அரசியல் தேவைப்படுகிறது!

 

 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு என்ற தலைப்பில் குருதேவர் விடுத்த நெடிய விளக்கக் கட்டுரை முதலாவதாக இருக்கின்றது. இதில் இந்திய விடுதலைப் போரின் உண்மையான நாயகர்கள் யார்யார்? அவர்கள் எந்த அடிப்படையில் இந்துமத இந்தியாவிற்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள் என்பதை விளக்கிடுகின்றார். இந்துவேதத்தை இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களுக்கு விளக்கிப் புரிய வைத்தாலே போதும், இந்துக்களே எழுச்சி பெற்று விடுதலை பெற்று விடுவார்கள் என்ற அடிபப்டைதான் என்றைக்கும் இந்தியாவை அடிமைப் படாமல் காத்திடும்; அதற்கு தமிழில் ஆதிசிவனார் வழங்கிய இந்துவேதத்தை இந்தியர்கள் புரியும்படிச் செய்ய வேண்டும். ஏனெனில் ஆதிசிவனார் தமிழில் வழங்கிய இந்துவேதத்தின் அடிப்படையிலேயே சில குறைபாடுகளுடன் இன்றைய இந்துமதம் உள்ளது. இந்தக் கட்டுரை சரித்திரப் பின்னணியுடன் உள்ள கட்டுரை.

அடுத்ததாக குருதேவர் அவர்கள் சேலம் சுற்றுப் பயணத்தின் போது சன்னிதானங்களுக்கு அருளிய அரிய கருத்துக்கள் சில தொகுத்து வழங்கப்படுகின்றன.

 

இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

 

 

 

 

 

 

Last edited: July 07, 2026, 18:16
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |