தளர்ச்சி நிலைகளைத் தடுத்தகற்றும் திருவோலை

இந்த இதழில் பல கட்டுரைகளின் நகல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவையனைத்தும் படிப்போர்க்கு குருதேவரின் எழுத்துக்களை மேலும் விரும்பிப் படிக்க வேண்டும் என்ற ஈர்ப்பினை வழங்கிடும். உள்ளே இருக்கும் கட்டுரைகள் பின்வருமாறு:

  1. பூசாவிதிச் செயல்முறை திருத்தக் குருவாணை - பருவபூசையின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான விதிமுறைகள்.
  2. குருதேவரின் மாணாக்கர்களான சித்தரடியான்களுக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு கிடைக்கும் என்பதை விவரிக்கும் மடல்.
  3. இந்து முன்னணியில் இருந்தபடி குருதேவருடன் தொடர்பு கொண்ட அடியாருக்கு குருதேவர் வழங்கிய அருளுரை, வாழ்த்துரை மற்றும் அருட்கணிப்பு.
  4. நிலம், நிலவு, தாரா என்ற மூன்று தமிழ்ச் சொற்கள் பற்றி குருதேவர் தரும் ஆராய்ச்சிக் கருத்துக்கள்.
  5. மதுரைச் சித்தரடியான்கள் மூலமாக அனைவருக்கும் விடுக்கப்பட்ட திருவோலை. இதுவே அனைவரின் தளர்ச்சி நிலைகளையும் தடுத்தகற்றும்.
  6. குருதேவர் அவர்களுக்குக் கிடைத்த மூன்று வெவ்வேறு அருளுலக அநுபவங்கள் பற்றி குருதேவர் அவர்களே விவரிக்கும் கட்டுரை.
  7. பாரதப் போர் நடத்திய கண்ணதேவனை விடுத்து குழலூதியபடி மாடு மேய்ப்போனாக இருந்த கண்ணதேவனை உயிர்ப்பிக்க வேண்டியதின் அவசியத்தை விவரித்த அஞ்சல்.

முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும்>>>