இந்துமத நிறுவனங்கள்

இந்துமத நிறுவனங்களைத் தோற்றுவித்திட...

 இந்துமதத்திற்கென வழிபாட்டு நிலையங்கள்தான் இருக்கின்றனவே தவிர, இந்துமதத்தை தத்துவம், செயல்சித்தாந்தம், உண்மையான மத வரலாறு ... போன்றவற்றின் அடிப்படைகளைக் காத்து வளர்த்திடும் நிறுவனங்கள் இல்லவே இல்லை. அத்தகைய நிறுவனங்களை எப்படி உருவாக்கிடுவது என்பது பற்றிய கட்டுரை முதலாவதாக இந்த மாத வெளியீட்டில் உள்ளது.

 அடுத்ததாக திருமந்திற ஓலைநாயகத்தின் அறிவிப்பு ஆணைகளாக 18 பத்திகள் 1986ஆம் ஆண்டில் இயக்கத்தின் வளர்ச்சிக்குரிய ஆணைகளாக குருதேவரிடம் பெற்று சித்தர்மாநகர் குருகுலத்திலிருந்து எழுதப்பட்ட கட்டுரை உள்ளது. இந்த ஆணைகளில் பெரும்பாலானவை இந்தக் காலக்கட்டத்திற்கும் பொருந்தும் என்பதை படிக்கும் போது உணரலாம்.

 மூன்றாவதாக முசிறிச் சித்தரடியார் ஒருவரின் ஊக்க உரைகள் கடிதமாக அவரின் கையெழுத்திலேயே கிடைத்தது. அவை, குருதேவரே அவருக்குள் இருந்து அவரை எழுதச் செய்தது போல் இருப்பதைக் காணலாம்.

 அடுத்த இரு கட்டுரைகள் சித்தர்மாநகர் பொறுப்பாளராக இருக்கும் அருள்மிகு வீரமாகாளி சன்னிதானம் அவர்களுக்கு குருதேவர் எழுதிய விளக்க அஞ்சல்களே.  இவற்றில், சில மாணாக்கர்கள் இயக்கத்தைக் குறைகூறி விலகுவதன் தொடர்பாக குருதேவர் அளிக்கும் வழிகாட்டல்களாக இருப்பினும்; அவற்றை எந்த விதத்தில் அணுகுவது என்பது பற்றி விரிவான விளக்கங்களை குருதேவர் வழங்குகின்றார்.

 இறுதியாக உள்ள கட்டுரையில் அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைச் செயலாக்குபவர்கள் எப்படி எப்படி எல்லாம் மக்களிடையில் செயல் பட வேண்டும் என்பதை விளக்குகின்றார் குருதேவர். இந்தக் கட்டுரை முழுமையாகக் கிடைக்கவில்லை.

 

விரிவாக இங்கே படிக்கவும்.