மண்ணுக்கும் விண்ணுக்கும் போர்

மண்ணுக்கும் விண்ணுக்கும் போர்

 பதினெண்சித்தர் பீடாதிபதிகள் பெற்றிட வேண்டிய பட்டங்களைப் பற்றிய ஓலைகள் பாரம்பரியமாகக் காக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 12வதாகத் தோன்றும் பதினெண்சித்தர் பீடாதிபதி பெற வேண்டிய அருட்பட்ட நிலைகளை விளக்கும் ஓலை பற்றிய குறிப்பு முதலாவதாக உள்ளது.

 இவ்வுலகம் தோன்றிய நாள் முதலாகத் தோன்றிய பெரும் அருளாளர்கள் சாதித்த சாதனைகளையும், மேலும் சாதிக்கக் கூடிய நிலைகளையும் விவரமாக விளக்கும் ஏடுகளும் பாரம்பரியமாகக் காக்கப்பட்டே வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து அரசயோகி என்ற பட்டம் பற்றியும், அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம் என்ற பட்டம் பற்றியும் கற்று வளர்ந்த குருதேவர் 18 ஆண்டுப் பயிற்சியில் முயன்று அரசயோகி பட்டத்தைப் பெற்றார். பின்னர் தமது 48வது வயது நிறைவதற்குள் 'அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம்' என்ற பட்டத்தினை பெரும் முயற்சி செய்து அடைந்தார் குருதேவர். ஆனால், அந்தப் பட்டத்திற்கான முயற்சியில் ஏற்பட்ட சில பல சிக்கல்களினால் விண்ணுலக அருளாளர்களுடன் ஏற்பட்ட போர் பற்றிய விவரங்கள் இந்த இரண்டாவதாக உள்ள கட்டுரையில் உள்ளன.

 அடுத்ததாக உள்ள அஞ்சல் வடிவக் கட்டுரையில் அருட்பணி விரிவாக்கத் திட்டம் செயலாக்குவதில் கிடைக்கும் வெற்றியில்தான் மெய்யான இந்துமதம் தழைக்கும் என்பதனை விளக்குகின்றார் குருதேவர்.

 இறுதியாக நைந்து போன நகலாகக் கிடைத்த அஞ்சலின் கிடைத்த பகுதி 'மத மறுமலர்ச்சி' என்ற தலைப்பிடப்பட்டு தரப்படுகின்றது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட--->>>

முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும்>>>