கருவூறார் கீதை

சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் கீதை

  இந்த தொகுப்பு நூலில் கீழ்க்காணும் தலைப்பிட்ட கையெழுத்துப் பிறதி நகல்கள் அடங்கி இருக்கின்றன. தமிழர்கள் அனைவரும் மட்டுமின்றி உலகத்தவர்கள் அனைவரும் படித்து சிந்திக்க வேண்டிய கருத்தாழம் குருதேவர் அவர்களின் எழுத்துக்களில் உள்ளன.

  1. பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் எழுதிய முதல் கீதை. இந்தக் கட்டுரை 12/03/1985இல் குருதேவர் அவர்களால் வெளியிடப் பட்டது.
  2. கருவாக்கு, குருவாக்கு, தருவாக்கு, திருவாக்கு, அருள்வாக்கு, மருள்வாக்கு, கருவாசகம் முதலியவற்றின் குருபாரம்பரிய வாசகம் - 01/01/1985இல் குருதேவர் அவர்களால் அருளப்பட்ட கட்டுரை.
  3. 05/04/1984இல் குருதேவர் அவர்களால் மதுரைச் சித்தரடியான் திரு வேம்படியான் மணி அவர்களுக்கு எழுதப்பட்ட அஞ்சலில் தமது அடியான்கள் மந்திறவாதிகளின் தீய பாதிப்புக்களை வெல்லும் வழி கூறிய அஞ்சல்.
  4. 22/03/1985இல் வட ஆற்காடு மாவட்டச் சுற்றுப் பயணத்திற்காக குருதேவர் அவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரை.
  5. 27/03/1985இல் மதுரைச் சித்தரடியான் திரு ம.சி.இராமன் அவர்களுக்கு எழுதிய 'தமிழின ஒற்றுமைச் செயல்சித்தாந்தம்' என்ற தலைப்பில் உள்ள அஞ்சல்.
  6. இறுதியாக காரைக்குடிச் சித்தரடியான் மு.இராமானுசதாசு அவர்களின் ஐயங்களுக்கு விளக்கமாக அளித்த நெடிய அஞ்சல் வடிவக் கட்டுரை. இதில் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் தம்மிடம் வரும் அடியான் அடியாள் அடியார்களை எதற்காக, எப்படி தயாரிக்க வேண்டும் என்ற விளக்கங்களை வழங்கி உள்ளார். உலகெங்கும் உள்ள மத குருமார்களை விட பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்குத்தான் அதிகமான பொறுப்பும், கடமைகளும் இந்த மண்ணுலகில் உள்ளன என்பதை இந்த அஞ்சல் விரிவாக விளக்குகின்றது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட இங்கே தொடரவும்--->>>

PDF வடிவில் படித்து பயன் பெற்றிட இங்கே தொடரவும்>>>