இந்துமதம் தமிழருடையதே!

இந்து என்ற சொல்லும் இந்துமதம் எனும் வாழ்வியல் முறையும் தமிழருடையவே!

1. குருதேவர் தமது பதினெண்சித்தர் பீடாதிபதி நிலையில் இருந்தபடி எண்ணற்ற அறிவிக்கைகளை பொதுமக்களுக்காக வெளியிட்டே செயல்பட்டார். பிற மடாதிபதிகள், பீடாதிபதிகள் போல் தன்னளவில் வாழ்ந்துவிட்டுப் போக விரும்பவில்லை குருதேவர் அவர்கள். அப்படி வெளியிட்ட அறிவிக்கைகளுள் ஒன்றே "அருளாட்சி அமைப்பு எழிச்சி நிலை அறிவிப்பு" எனும் அறிவிக்கை. இந்த அறிவிக்கையும், இதன் தொடர்பாக எழுதப்பட்ட விளக்கங்களும் இந்த வெளியீட்டின் முதல் கட்டுரையாக உள்ளது.

இந்த வெளியீட்டில் உள்ள பிற கட்டுரைகள்:

2. புதிய அறிமுகத்தாருக்கு விளக்கம் தரும் விதமாக எழுதப்பட்ட கருத்து விளக்க அஞ்சல் "இந்து என்ற சொல்லும், இந்துமதம் எனும் வாழ்வியல் முறையும் தமிழருடையவே!"

3. இயக்கத்தின் செயல்நிலைகளை விவரித்து தமது மாணாக்கருக்கு எழுதிய திருவோலை.

4. அடியான்களின் செயல்நிலைகளில் திருத்தம் வழங்கும் விதமாக எழுதப்பட்ட தனிமனித விமரிசனச் செயல்திட்ட முடங்கல்.

5. குருதேவர் தமது தலைமை மாணாக்கருக்கு கொடுத்த அறிவுரை அஞ்சல்: "அருள்நிலையோடு அறிவு விழித்த நிலையில் செயல்பட வேண்டும்"

6. "செயல்நிலை மேம்பாட்டுப் பரிந்துரைகள்" என்ற தலைப்பில் குருதேவர் வழங்கிய பரிந்துரைகள்.

மேலும் படிக்க .....