முப்பெரு விழா

அருளுலக முப்பெரு விழா

    அருளாட்சி அறிவிப்பு, அருளாட்சி அழைப்பு, அருளாட்சி அமைப்பு என்ற மூன்றும் சேர்ந்தே அருளுலக முப்பெரு விழாவின் திட்டங்களாகின்றன என்பதை விளக்கிய அறிவிக்கையும், குருநிலை விளக்கக் குறிப்பும் இந்த முதல் கட்டுரையில் உள்ளன.

   முப்பெருவிழாவின் போது தாமாகவே நிகழ்ந்த சித்து விளையாடல் பற்றிய சிறு குறிப்பு அடுத்ததாக உள்ளது.

    மருத்துவம் படித்துக் கொண்டிருந்த மாணாக்கனுக்கு வெற்றிகரமாக தேர்வினைச் சந்தித்திட வழங்கிய பூசைக் குறிப்பும், கருத்து விளக்கங்களும் அடுத்து உள்ள கட்டுரையில் உள்ளன. ஆனால், அவருக்கு வழங்கிய பூசை மந்திரங்கள் அந்தச் சூழ்நிலையில் அவருக்கு மட்டுமே வழங்கியவை என்பதால் வெளியிடப் படவில்லை.

   அடுத்ததாக இரண்டாம் முப்பெருவிழா நிகழ்வின் மூலம் பெறப்பட வேண்டிய எச்சரிக்கைகளை விளக்கி, மூன்றாம் முப்பெரு விழாச் செயல்நிலைகளுக்காக பாராட்டுகளும் வழங்கிய திருவோலை உள்ளது.

  இடையில் "இந்தியாவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே, இவர்களின் மதமே இந்துமதம்" என்பதனை விளக்கும் பகுதிகள் ஓர் அஞ்சலிலிருந்து எடுத்து வழங்கப் பட்டுள்ளன.

  அடுத்ததாக செயற்குழு மாநாடு அறிவிப்பு மடலில் வழங்கப் பட்ட கோள்வட்டச் செயல்திட்டங்களும், இராசிவட்டத் தீர்மானங்களும் உள்ளன.

  இறுதியாக வேம்பை அடியான்களுக்காக வழங்கிய 'பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சொல்லடி நாயனாராக' அறிவிக்கப் பட்டதற்கான காரண விளக்கங்களும், குருதேவரின் செயல் நிலை விளக்கங்களும் உள்ள அஞ்சல் வடிவக் கட்டுரை உள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்.....>>>>