பங்குனி மாதம் (March - 2017)
இராமாயணக் கதையை மீண்டும் முழுவதுமாக அளிப்பது அல்ல குருதேவர் அவர்களின் முயற்சி. மாறாக இன்று இருக்கும் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு வாழ்ந்து வரும் இராமாயணக் கதைக்கு மூலமாக, கருவாக உள்ள சித்தர் இராமாயணத்தை அறிமுகப் படுத்துவதுதான் இதன் நோக்கம்.
அதன்படியே இந்த மாத இதழில் சித்தர் இராமாயணத்தினையும், நாட்டு வழக்கில் இருக்கும் இராமாயணத்தினையும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்த கட்டுரை உள்ளது. நிகழ்ந்தவற்றை அப்படியே வழங்கிடுவது சித்தர் இராமாயணம். ஆனால், பிற நாடுகளிலிருந்து இந்த நாட்டிற்குள் வந்து குடியேறி இந்த நாட்டவர்களாக மாறிய பிறாமணர்களின் கற்பனைக்கு ஏற்ப மிகப் பெரிய திருத்தங்களைக் கொண்டதுதான் வடமொழியில் இருக்கும் 'வால்மீகி இராமாயணம்'.
இதனை விளக்கும் வகையில் அமைந்த இந்த மாத இதழினை PDF கோப்பாக முழுமையாகப் படித்திட இங்கே செல்லவும்.