கார்த்திகை மாதம் (November 2017)
குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் எண்ணற்ற மாணாக்கர்களைத் தயாரித்தார். அவர்கள் சித்தரடியான்களாக, சித்தரடியாள்களாக, சித்தரடியார்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரின் அருள் அநுபவங்களை அவரே ஓர் அஞ்சல் வடிவக் கட்டுரை மூலம் விளக்கியுள்ள கட்டுரை இந்த இதழில் முதன்மை பெறுகின்றது.
அடுத்ததாக குருதேவர் அவர்கள் புதிய மாணாக்கர்களுக்கு வழங்கிய சுருக்கமான அறிவுரை 'நனவு' என்ற பெயரில் இருக்கின்றது.
மூன்றாவதாக இந்து மதத்தின் விளக்கமாக குருதேவர் வழங்கிய சிறிய கட்டுரை உள்ளது.