வைகாசி மாதம் (May - 2017)
குருதேவர், 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி, ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தமது தலைமைச் சீடர்களுக்கு எழுதிய அருளுரை, அறிவுரை, அறிவார்ந்த அருளுரை, அருளார்ந்த அறிவுரை அஞ்சல்கள் ஏராளம். அவற்றில் அன்புள்ள சேவுக! என்று தலைப்பிட்டு எழுதிய சில அஞ்சல்கள் இந்த வெளியீட்டில் உள்ளன.
இன்றைய தமிழர் மத நிலைகளும், தமிழர் நாட்டு நிலைகளும், தமிழர் நாட்டு ஆட்சி நிலைகளும், .... இவற்றைச் சரி செய்வதற்காக இயக்கங்கள் நடத்தியும், தனி மனிதர்களைத் தயாரித்தும் செயல்படும் தன்னுடைய நிலைகளை விவரித்தும் குருதேவர் எழுதிய கட்டுரைகளே இவை.