இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2016 வெளியீடுகள் > சித்திரை மாதம் (May)
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

சித்திரை மாதம் (May)

தமிழினத்தைக் காப்பாற்றக் கூடியது சமய உணர்ச்சியே!

  இந்த இதழ் வெளிவரும் காலத்தில் தமிழகத்தில் தேர்தல் காரணமாக அரசியல் உணர்ச்சியே ஓங்கி இருந்தது. இந்தச் சூழலில் தமிழினத்தைக் காப்பாற்றக் கூடியது சமுதாய உணர்ச்சியா? அரசியல் உணர்ச்ச்சியா? என்ற கேள்வி எழுப்பி அதற்கான விடையைத் தரும் கட்டுரை முதலாவதாக தரப் பட்டுள்ளது.

  பிற கட்டுரைகள்:

    இந்து மறுமலர்ச்சி இயக்க வீரர் சிந்தனைக்காக M.P.பிள்ளை அவர்கள் தரும் கருத்துக்கள்.

     குருதேவர் அவர்கள் அனைவருக்கும் வழங்கிய கருத்துக்கள் 'சோதனை + வேதனை = சாதனை' என்ற தலைப்பில் உள்ள கட்டுரை.

     பஞ்சாப்பின் சீக்கியர்கள் பின்பற்றும் 'குர்பாணி' முறை "குருபாணி" என்ற அழகிய ஆழமான பொருளுடைய தமிழ்ச் சொல்லின் அடிப்படையிலேயே வந்தது என்பதற்கான விளக்கங்கள்.

     மதுரை ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழினப் பகைவர்களால் எரித்து அழிக்கப் பட்டதற்குப் பின்பே தமிழினம் தாழ்ந்தது என்பதை விளக்கும் குருபாரம்பரியக் கருத்து விளக்கக் கட்டுரை.

    பதினெண்சித்தர் மருத்துவ ஆராய்ச்சிக் குழு அமைய வேண்டியதின் அவசியமும், அமைய வேண்டிய விதமும்.

இந்த இதழினை PDF கோப்பாகப் படித்திடவும்.

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |