செப்டம்பர் 2014
இந்த இதழில் மெய்யான இந்துமதம் பற்றி விளக்கும் வகையில் குருதேவர் அவர்கள் வழங்கிய கட்டுரைகள் உள்ளன.
1. மெய்யான இந்துமதம் காத்த கருவூர்த் தேவர் வரலாறு.
இதில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத் திரட்டும், பன்னிரு திருமுறைகள் திரட்டும் பிறந்த வரலாறு தரப் பட்டுள்ளது.
2. மெய்யான சித்தர் பாடல்கள்.
மற்ற 48 வகைச் சித்தர்களில் சிலர் பாடிய பாடல்களில் பொய்யான ஹிந்துமதத்தைச் சாடியும் மெய்யான இந்துமதத்தின் வலிமையை விளக்கியும் உள்ள பாடல்கள் குருதேவர் அவர்களால் வழங்கப் பட்டுள்ளன.
3. குண்டலினி மாயை.
இன்று உலக அளவில் யோகம், குண்டலினி, ... முதலியவை கற்றுத் தருகின்ற நிறுவனங்கள் அனைத்தும் உண்மையான பயிற்சிகளைத் தர வில்லை என்பதை குருதேவர் அவர்கள் விளக்குகின்றார்.
4. மூன்று வெவ்வேறு அஞ்சல் வடிவக் கட்டுரைகள்.
இவற்றில் குருதேவர் அவர்கள் மெய்யான இந்துமதம் பற்றி விளக்கியும், குருபாரம்பரிய எழுத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய விதத்தை வழங்கியும் கருத்துக்களைத் தந்துள்ளார்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.