அக்டோபர் 2014
இந்த இதழில் ஹிந்துமதம் என்பது உண்மையான இந்துமதத்திலிருந்து மிகவும் வேறானது என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரைகள் இரண்டு இடம் பெறுகின்றன.
1. தமிழின மறுமலர்ச்சிப் போர் - அருட்கேணி நீர்க்குவளைகள் ....! (The War of Tamilian Renaissance)
இந்தக் கட்டுரையில், பெரியார் நடத்திய திராவிடர்களுக்கு சுயமரியாதை இயக்கம் என்பதே தமிழின மறுமலர்ச்சிப் போர்; இது கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக நடந்து வந்து கொண்டிருக்கின்றது என்பது சரித்திரப் பூர்வமாக விளக்கப் படுகின்றது.
2. மெய்யான இந்துமதமும் பொய்யான ஹிந்துமதமும் - வேற்றுமை விளக்கக் கட்டுரை.
சமசுகிருத மொழியில் பின்பற்றப் படும் மதம் ஹிந்துமதம். இது பிறாமணர்களாலும், வட ஆரியர்களாலும் மிகவும் பிடிவாதமாகப் பின்பற்றப் படுகின்றது. இதற்கும் தென்னிந்தியாவில் இருக்கும் தமிழை அடிப்படையாகக் கொண்ட மெய்யான இந்துமதத்திற்கும் உள்ள வேற்றுமைகள் ஏராளம். இன்றைய நிலையில் ஏன் இதை பிரித்து உணர வேண்டும் என்பதை விளக்கி விட்டுப் பின் சில வேறுபாடுகளை வெட்டவெளிச்சமாக இந்தக் கட்டுரை விளக்குகின்றது.
இந்த இதழை PDF கோப்பாகப் படிக்கவும்.
நேரடியாகப் படங்களாகவும் இங்கே படிக்கலாம்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.