இங்கே உள்ளீர்கள் : ஆடி மாத வெளியீடு
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

ஆடி மாத வெளியீடு

உள்ளுறை

1.-“குருவழிச் சித்தியால்தான் தருவாகவும், திருவாகவும் உருவாக முடியும்!” - 22/06/1985இல் குருதேவர் ஆணைப்படி தலைமைப்பீடத்திலிருந்து வடலூரில் உள்ள வள்ளலார் திருச்சபை துறவி கந்தசாமி அவர்களுக்கு எழுதப்பட்ட கட்டுரை அஞ்சலின் நகல்.

2.-“பாலாலயப் பூசைமுறை, பூசாவிதிகள்” - 05/06/1985இல் குருதேவர் ஆணைப்படி தலைமைப்பீடத்திலிருந்து அருள்மிகு வீரமாகாளி சன்னிதானம் அவர்களுக்கு எழுதப்பட்ட கட்டுரை அஞ்சலின் நகல்.

3.-“செயல் விளங்கு அறிவுரை நல்கு திருவோலை” - 1985இல் குருதேவர் சொல்ல தலைமைப்பீடத்திலிருந்து சித்தரடியார் திரு சோ.இரவீந்திரன் அவர்களுக்கு எழுதப்பட்ட அஞ்சலின் நகல்.

4.-“அடிமைத் தமிழா முடிவெடு விடிவு பெற!” - தலைமைப்பீடத்திலிருந்து எழுதப்பட்ட கவிதை.


 

மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

அருளுலகத் திறவுகோல்

"... அருளுலக வள்ளல் பெருமான் தான் பாடிய அருட்பாக்களை அப்படியே திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டிருந்தால் போதும்; அருளுலகச் சத்திகளும், சித்திகளும், முத்திகளும் கிடைத்திடும் என்று எங்காவது வலியுறுத்திக் கூறியிருக்கிறாரா?

குறிப்பு:-

அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வடலூர் இராமலிங்கம் பிள்ளை மறை பொருளாகவோ, குறிப்புப் பொருளாகவோ தமது அருட்பாக்களே அருளுலகத் திறவுகோல், அருளுலக வழி, அருளுலக வழித்துணை, அருளுலக வழிகாட்டி, அருள்வாழ்வின் விழி, ... என்று எங்காவது கூறியிருப்பதாக, எவரேனும் சான்றோ, ஊன்றோ காட்டுவாரேயானால் ..."

 

குருதி அவிர்ப்பலியின் அவசியம்

 

"... எனவே, நாம் மிகமிக எச்சரிக்கையாக யாருடைய மனமும் புண்படாமல் நம் கருத்துக்களை எடுத்துக் கூற வேண்டும். குருதி அவிர்ப்பலியும், இறைச்சிப் படையலும் உடைய நமது பூசை அறைகளில் ஞானசித்தரான இராமலிங்க அடிகளாரை அருவுருவ நிலை கடந்து, உலகியலுக்கு உட்பட்டு அருளை அநுபவப் பொருளாக வழங்கக் கூடிய ஒரு கடவுளாக, ‘வழிபடுநிலையினராக’ மாற்றும் பணியில் ஈடுபட வேண்டும். ஏளனம்பட்டியார் காலத்திலிருந்து நமது பூசைகளில் சொல்லப்படும் இராமலிங்க அடிகளாரின் அருள்வாசகங்களைத் தொடர்ந்து சொல்லுவதோடு அவரை ஞானசித்தராக உருப்பெறச் செய்த மந்திற, தந்திற, எந்திறங்களைப் பயன்படுத்தி அவருடைய படங்களுக்கும், சிலைகளுக்கும் உயிரூட்ட வேண்டும்! உயிரூட்ட வேண்டும்! உயிரூட்ட வேண்டும்! அவரும் சித்தர்நெறி வழி வந்த அருளாளர்தான் என்ற உணர்வோடு நமது பூசைகளில் அவருக்கும் பங்கு தாருங்கள். ..."

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |