அருள்வழிப் புரட்சி

அருள்வழியில் புரட்சி நிகழ்வு

    செயல் ஊக்க அழைப்பு அறிவிப்புத் திருவோலையாக குருதேவர் அவர்களின் அருட்பணி விரிவாக்கத் திட்டச் சுற்றுப் பயணங்களில் பங்கு பெற்று ஆக்கப் பணிகளில் ஊக்கமுடன் செயல்பட தமது கோவை மாவட்ட அடியான்களுக்கு விடுத்த கட்டுரை அஞ்சல் இந்த இதழில் முதலாவதாக உள்ளது. இந்த அஞ்சலில் அருள் வழியில் புரட்சி நிகழ்ந்தால்தான் முழுமையான மாற்றங்களை இத் திருநாட்டில் கொண்டு வர முடியும், அனைவரும் சமாதானமாக வாழலாம் என்ற கருத்துக்களை முன்னிறுத்தி விளக்கங்கள் வழங்கும் அஞ்சல் இது.

    அடுத்ததாக, குரு வழியாக மாணாக்கர்கள் தயாராக என்ன விதமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை விளக்கிய பின்பு; இந்தியா விடுதலை பெற்ற பின் அடைந்த மாற்றங்களில் என்ன குறைகள் உள்ளன? எதன் காரணமாக அவை நிகழ்ந்தன? என்ன செய்தால் குறைகளைச் சீர் செய்ய முடியும் என்பதற்கான செயல் விளக்கங்களையும், செயல் திட்டங்களையும் இரண்டாவதாக உள்ள கட்டுரையில் வழங்குகின்றார் குருதேவர்.

     மூன்றாவதாக உள்ள அஞ்சல் கட்டுரையில் குருதேவர் தன்னிலை விளக்கங்களை வழங்கிய பின்; இந்திய நாட்டிற்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் என்ன கொள்கையினைப் பின்பற்றினால் நிம்மதியாக வாழ முடியும் என்பதற்கான விளக்கங்களை வழங்குகிறார். அனைத்தும் மொழி, இனம், நாடு என்ற முக்கோணக் கோட்டைக்குள் நிகழ்ந்தால்தான் முழுமையான நிம்மதியும் சமாதானமும் கிடைக்கும் என்பதனை நான்காவது முப்பெரு விழா ஏற்புத் திருவோலையாக குருதேவர் வழங்கியுள்ளார்.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்...>>>