இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2016 வெளியீடுகள் > ஆனி மாதம் (July)
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

ஆனி மாதம் (July)

"சமயமும் அறிவியலும்"

  இன்றைய அறிவியல் சமயத்திற்கு எதிரானது என்று கருதும் நிலையே பொதுவாக இருக்கின்றது. ஆனாலும் அறிவியலில் வளர்ந்த நாடுகளில் கூட சமயம் (Religion) மக்களிடையே மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் குருதேவர் சமயத்தையும் அறிவியலையும் ஒப்பிட்டு ஆய்விற்கான விளக்கங்களையும் வாதங்களையும் இந்த நூலில் முன் வைக்க்கின்றார். அத்துடன் தமிழகத்துச் சிலைகள் மட்டும் வெளிநாடுகளுக்குத் திருடிக் கொண்டு செல்லப் படுவது ஏன் என்ற வினாவிற்கு உரிய விடைகளையும் தருகின்றார்.

 இறைச்சியும் இறைவனும் என்ற தலைப்பில் ஒரு சிறிய விளக்கமும், மனித வாழ்க்கை பற்றிய அரிய குருபாரம்பரிய வாசகமும் இந்த வெளியீட்டில் படிக்கலாம்.

PDF கோப்பாகப் படித்திட இங்கே click செய்யவும்.

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |